இந்தியா

தர்மத்தின் அடிப்படையிலல்லாமல் பொய்களின் அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் மோடி-ராகுல்

39views

தர்மத்தில் அடிப்படையிலல்லாமல் பொய்களின் அடிப்படையில் மோடி வாக்கு சேகரிக்கிறார் என காங்., எம்பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் ஏழாம் கட்ட மற்றும் கடைசி கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து காங்கிரஸ், பாஜ., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் எம்பி., ராகுல் பிரசார பேரணியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பொய்களின் அடிப்படையில் பிரதமர் மோடி வாக்குகளை சேகரிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேசத்தில் வேலை வாய்ப்பை அதிகரிப்பது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது உள்ளிட்டவை குறித்து தற்போது பிரதமர் பேச மறுப்பதாகவும் இந்து மத புத்தகங்கள் எதிலும் பொய்களை சரமாரியாக அடுக்க வலியுறுத்தப்படவில்லை என்றும் காட்டமாக விமர்சித்தார்.

சகோதரி பிரியங்காவுடன் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜையில் கலந்து கொண்ட ராகுல் பின்னர் பிரசாரத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகள் குறித்து உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பேசாமல் அவர் சாதுரியமாக மற்ற விஷயங்கள் குறித்து பேசுவதாக கூறிய ராகுல், சட்டீஸ்கர் மாநிலத்தில் முன்னதாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு பின்னர் அதுகுறித்து பிரதமர் மோடி பேச மறுத்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

தர்மத்தின் அடிப்படையில் தேர்தலில் வெல்லாமல் கொள்கைகளின் அடிப்படையிலேயே மோடி தேர்தலில் வெற்றி பெற முயற்சி மேற்கொள்கிறார் என்று ராகுல் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!