சினிமாசெய்திகள்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்.. இரு மொழிகளில் தயாராகும் திரைப்படம்.. படக்குழுவினர்களின் அதிகாரப்பூர்வ தகவல்..!!

64views

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தன்னுடைய திறமையை கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆனந்தம்” படத்தின் மூலம் வெளிப்படுத்தி சினிமா உலகிற்கு அறிமுகமாகியதை தொடர்ந்து மிகவும் அதிரடியான ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதையடுத்து இதில் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் ஆதிக்கு ஜோடியாக அக்ஷரா கவுடா இணைந்து நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!