கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், நடிகை சௌகார் ஜானகி உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் – தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 107 பேர் பத்மஸ்ரீ விருது பெற உள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தை சேர்ந்த சதிராட்டக் கலைஞரான முத்து கண்ணம்மாள், கிளாரிநெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்ளிட்ட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.