தமிழகம்முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்

261views

புதுச்சேரி:’ ‘தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்,” என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தெரிவித்தார்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய, புதுச்சேரி வந்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜிவ்குமார் ஆகியோர், நேற்று முன்தினம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிநிதிகளை சந்தித்து, கருத்துகளை கேட்டறிந்தனர்.

நேற்று காலை, அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம் செய்தனர். பின், மத்திய, மாநில தேர்தல் அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அளித்த பேட்டி:

புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட, 10 அரசியல் கட்சிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தலைமை செயலர், டி.ஜி.பி., யுடன் ஆலோசனை நடந்தது. பாரபட்சமின்றி, வெளிப்படை தன்மையுடன் தேர்தலை நடத்துவோம்.தமிழகம், புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது, வெளிநாட்டு இந்தியர்களுக்கு, ‘ஆன்லைன்’ ஓட்டுரிமை தருவது, வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை சரி செய்யுமாறு, அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரினர்.உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, புதுச்சேரியில் மூன்று நியமன எம்.எல்.ஏ., க்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு, பட்ஜெட்டில் ஓட்டளிக்க உரிமை உள்ளது என கூறப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒருங்கிணந்து இருப்பதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும்.

கொரோனா காரணமாக, புதுச்சேரியில் உள்ள, 952 ஓட்டுச் சாவடிகளை, 1,564 ஆக உயர்த்தி உள்ளோம்.

தேர்தல் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்து, கொரோனா தடுப்பூசி போட தலைமை செயலரை அறிவுறுத்தி உள்ளோம்.பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும், 16ம் தேதி, மத்திய வருமான வரி, சுங்கத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, ஐந்து மாநிலத் தேர்தலில் செய்ய வேண்டிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.’புதுச்சேரியில் குறைந்தது, 10 ஆயிரம் வாக்காளர்களை பரிசு பொருட்கள் கொடுத்து விலைக்கு வாங்கினாலே, எளிதாக வெற்றி பெறலாம். தேர்தல் முடிவு ஒரு தலைபட்சமாக மாறுமே’ என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு சுனில் அரோரா கூறுகையில், ”வட கிழக்கு மாநிலங்களில், 200 வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் கூட உள்ளன. அங்கு பாரபட்சமின்றி, நேர்மையாக தேர்தலை நடத்தியுள்ளோம். புதுச்சேரி பெரிய விஷயம் இல்லை. வேட்பாளர் செலவு தொகை, 20 லட்சத்தில் இருந்து, 22 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!