தமிழகம் முழுவதும் இன்று 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுமார் 10 லட்சம் பேர் தகுதியுள்ளவர்களாக உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தவணை தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒன்றியப் பகுதிகள் உள்பட இன்று மொத்தம் 600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தரப்பட உள்ளது.