செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு.: தமிழக அரசு அறிவிப்பு

81views

வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்த அரசாணையில், 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in. www.dge.tn.nic.in  என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!