தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் கத்தரி வெயில்..!

80views

மிழகத்தில் இன்று முதல் மே 29 ஆம் தேதி வரை கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரமானது ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலானது ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நீடிக்கும்..

தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் கோடை வெயிலின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில்,அதன் உச்ச நிலையான கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை விட இந்த மாதத்தில் அதிகரித்து காணப்படும்.

இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கியதில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் தொடர்ந்து அதிகளவிளான வெப்பம் பதிவாகி வருகிறது.குறிப்பாக, ஒரு சில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேலாக அதிகரித்துள்ளது.இந்த நிலையில் கத்திரி வெயிலும் இன்று தொடங்குவதால் மக்கள் அவதிப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால்,மக்கள் அக்னி வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள பகல் நேரங்களில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும்,மேலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!