ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் கிளாஸ் 4 பிரிவில் இந்தியாவின் பவினாபென் ஹஸ்முக்பாய் படேல் முதல் சுற்றில் சீனாவின் ஜூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இதில் 2008 மற்றும் 2012-ம் ஆண்டு பாராலிம்பிக் சாம்பியனான ஜூ யிங், 11-3, 11-9, 11-2 என்ற நேர் செட்டில் பவினாபென்னை வீழ்த்தினார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பவினாபென் தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் மேகன் ஷாக்லெட்டனுடன் இன்று மோதுகிறார்.
முன்னதாக மகளிருக்கான கிளாஸ் 3 பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சோனல்பென் மனுபாய் படேல், சீனாவின் கியான்லியை எதிர்கொண்டார். 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கியான் லி 9-11, 11-3,15-17, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் சோனல்பென்னை வீழ்த் தினார். டி பிரிவில் இடம் பிடித்துள்ள சோனல்பென் அடுத்த ஆட்டத்தில் இன்று தென்கொரியா வின் மி கியு லீயுடன் மோதுகிறார்.