விளையாட்டு

டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்- சூரியகுமார் யாதவ் சேர்ப்பு

52views

நியூசிலாந்து அணிக்கு எதிராக 25ம் தேதி வியாழனன்று தொடங்கும் டெஸ்ட் தொடரிலிருந்து தொடக்க வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சென்ற டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த சூரியகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுலின் இடது தொடையில் தசையில் காயம் ஏற்பட்டதால் அவர் விலகியதாக பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளின்படி கே.எல்.ராகுல் பயிற்சி அமர்விலிருந்து விலகியுள்ளார். மேலும் பயிற்சியில் ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால் ஆகியோர் இறங்கி பயிற்சி மேற்கொண்டனர். ஏற்கெனவே புஜாரா கூறும்போது ஷுப்மன் கில் நிச்சயம் ஆடுவார், ஆனால் எந்த டவுன் என்று இப்போது நான் வெளியிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து ஷ்ரேயஸ் அய்யர் தன் முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது, சூரிய குமார் யாதவ் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் நன்றாக ஆடினார். இதனையடுத்து அவரை அணியில் சேர்த்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!