விளையாட்டு

டி20 அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

42views

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். இந்த இணை இம்முறையும் பவர் பிளேவில் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடியது.

ஸாம்பா சுழலில் சிக்ஸர் அடிக்க முயன்று அஸம் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து ரிஸ்வான், ஸமான் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர்.

இதன்பிறகு, படிப்படியாக அதிரடிக்கு மாறி ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ரிஸ்வான் முயற்சித்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறக்கவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஸமான் 32 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களம் இறங்கியது. அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதல் பந்திலேயே அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இந்நிலையில் மார்ஷ் 28 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்மித் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

டேவிட் வார்னர் 30 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்ததை அடுத்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 7 ரன்களில் அவுட் ஆனார்.

இதனையடுத்து ஸ்டாய்னிஸ் – வேட் இணை ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. 2 ஓவர்களுக்கு 22 ரன்கள் தேவை என்றபோது பாகிஸ்தான் அணியின் ஷாகீன் அப்ரிடி பந்து வீச வந்தார்.

அந்த ஓவரிலேயே வேட் ஆட்டத்தை முடித்தார். தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!