செய்திகள்தொழில்நுட்பம்

டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கம்… ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

101views

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை கோடிக்கணக்கானோர் பின்பற்றி வந்தனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து அவரின் கணக்கை அந்நிறுவனம் நிரந்தரமாக தடை செய்தது. ஆனால் ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் டோனால்ட் டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மூடப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அவரின் கணக்கு பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்தே பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த வித பிரச்சனைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே மீண்டும் அவரது பேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!