செய்திகள்விளையாட்டு

ஜூலை 2 இங்கிலாந்து. ஜூலை 3 இலங்கை பயணம்.

85views

இங்கிலாந்தில் 6 டெஸ்ட் போட்டிகள், இலங்கையுடன் 3 ஒரு நாள், 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கிறது இந்நிலையில் இதற்கான பயண அட்டவனை வெளியாகியுள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணி வரும் 2 ஆம் தேதி இங்கிலாந்து சுற்றுபயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி இலங்கை சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. மேலும், ஜூலை 13 முதல் 27-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னனி வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கை செல்லும் அணிக்கு தவான், கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள். இந்திய அணி ஜூலை 5 ஆம் தேதி இலங்கை புறப்பட்டு செல்லும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

மேலும், தேர்வு செய்யப்படும் வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பார்கள். இந்த தனிமை காலம் முடிந்தபிறகு அவர்கள் இலங்கை செல்வார்கள். இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!