விளையாட்டு

ஜாம்ஷெட்பூர்–ஐதராபாத் ‘டிரா’: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ‘விறுவிறு’

45views

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது.

கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 8வது சீசன் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஸ்டீவர்ட் முதல் கோல் அடித்தார். இதற்கு ஐ தராபாத் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என, முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஐதராபாத் அணிக்கு 54வது நிமிடத்தில் ஆக்பெச்சே ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!