இந்தியா

சைபர் குற்றங்கள்..10வது இடத்தை பிடித்தது கர்நாடகா

61views

2021 ஆம் ஆண்டிற்கான காவல்துறையின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய காவல்துறை அறக்கட்டளை தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் சிறப்பாக தங்களுடைய சேவையை செய்ததன் அடிப்படையில் ஆந்திரா காவல்துறை முதலிடத்தைப் பிடித்துள்ளது. தெலுங்கானா 2-வது இடத்தையும், கேரளா 4_வது இடத்தையும் கர்நாடகா 11-வது இடத்தையும் பிடித்துள்ளன. சிறப்பான முறையில் தங்களுடைய பணிகளை செய்யும் கர்நாடக காவல்துறைக்கு 11வது இடம் கிடைத்துள்ளது.

மேலும் கலவரம் நடக்கும்போது கர்நாடகா காவல்துறை சிறப்பான முறையில் அதை கையாளுவதாக இந்திய காவல்துறை அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களை மரியாதையாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதிலும், கர்நாடக காவல்துறை சிறந்து விளங்குவதாக அறக்கட்டளை கூறியுள்ளது.

இதையடுத்து சைபர் குற்றங்களை கண்டு பிடிப்பதில் கர்நாடக காவல்துறை 10-வது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் பொருள்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பது கர்நாடக காவல்துறை சிறப்பான முறையில் யார் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!