செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக நாடுகள் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் எலன் மாஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
இதில் சீனாவும் இணைந்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆய்வுக்காக தியான்வென்-1 விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது சீனா. லாங் மார்ச் 5 என்ற பெயருடன் ஹெனன் தீவில் இருந்து இது விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது முறையாக பறந்த இன்ஜெனுவிட்டி ஹெலிகாப்டர்.. வீடியோ வெளியிட்ட நாசா
6 சக்கரங்களைக் கொண்ட ரோவருடனான இந்த விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்றது. தற்போது செவ்வாய்கிரகத்தில் இந்த தியான்வென்-1 ரோவர் விணகலம் வெற்றிகரமாக தரை இறங்கி உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த விண்கலம் ஆய்வு செய்யும். இந்த தியான்வென்-1 ரோவர் மொத்தம் 240 கிலோ எடையுள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான படங்களை எடுக்கவும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
மேலும் இந்த தியான்வென்1- ரோவர் விணகலத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஐந்து கருவிகள் செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது.
தியான்வென்-1 என நாம் அழைப்பது சீன மொழியில் தியன்ஹெ என அழைக்கின்றனர். சீன மொழியில் தியன் என்ற சொல்லுக்கு தமிழில் வான் என பொருள். ஹெ என்ற சொல்லுக்கு தமிழில் இணக்கம், இசைவு என பொருள்.