சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த, ‘மெகா’ தடுப்பூசி முகாம்களில், ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது போன்ற, தொடர் முகாம்களின் மூலம், சென்னையில், மிக விரைவில், 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கொரோனா மூன்றாம் அலை பரவலை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுதும் நேற்று ‘மெகா’ கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.சென்னை மாநகராட்சி சார்பில், 1,600 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, கல்லுாரிகள், பூங்காக்கள், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட, மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
எங்கெல்லாம், தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, இணையதள முகவரியும் வழங்கப்பட்டது. மேலும், வீடு வீடாக களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் தடுப்பூசி போடாதோரின் விபரங்கள் சேகரித்து, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அறிவித்தபடி, நேற்று காலை 7:00 மணிக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. தடுப்பூசி முகாம்களுக்கு, தேர்தல் ஓட்டு பதிவை போன்று, மக்கள் தாமாகவே முன்வந்து, ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.சென்னையில், 600 மருத்துவர்கள், 600 செவிலியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் மூலம், நேற்று ஒரே நாளில், 1.20 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இசை மழையில் தடுப்பூசிசெங்கல்பட்டு மாவட்டத்தில், 936 இடங்களில் இம்முகாம் நடத்தப்பட்டது. இம்மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில், மாடல் சிறப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டது.
வாழை மரம் கட்டி, சுற்றி பந்தல் போடப்பட்டு, உட்பகுதியில் பூச்செடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோர், புத்துணர்ச்சியோடு ஊசி போட்டுக்கொள்ள ஏதுவாக, மையத்தில், ‘மெலோடி’ பாடல்கள் ஒலிக்கப்பட்டன. பாடல்களைக் கேட்டவாறு மக்கள் ஊசி போட்டுக் கொண்டனர். நகராட்சியின் இந்த முயற்சியை பலரும் பாராட்டினர்.தலைமைசெயலர் ஆய்வுசென்னை மாநகராட்சி சார்பில், ஆலந்துார் மண்டலம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட அண்ணா பல்கலை வளாகம், காமராஜ் அவென்யூ, சென்னை உயர்நிலைப்பள்ளி, வார்டு- 172, கோட்டூர்புரம், கோட்டூர் வில்லா குடியிருப்புப் பகுதியில் நடந்த தடுப்பூசி முகாம்களையும் ஆய்வு செய்து, தடுப்பூசி போட வந்தோரிடம் உரையாடினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.வியாபாரிகளுக்கு அறிவுரைகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழம், பூ என, மூன்று மார்க்கெட்டிலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த முகாமை, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின், பேருந்து நிலைய நடைமேடை கடைகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியர்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தினார்.