விளையாட்டு

சூப்பர் ஓவரில் சாதித்தது எப்படி ? – அக்சர் படேல் உற்சாகம்

77views

டுகளம் சுழலுக்கு சாதகமாக இருந்ததால், சூப்பர் ஓவரை நான் வீசினேன்,” என அக்சர் படேல் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் டில்லி (159/4), ஐதராபாத் (159/7) அணிகள் மோதின. இரு அணிகளும் சம ரன்கள் எடுக்க, போட்டி ‘டை’ ஆனது. அடுத்து நடந்த சூப்பர் ஓவரில் டில்லி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல், 7 ரன் மட்டும் விட்டுக் கொடுத்தார். கொரோனாவில் இருந்து மீண்ட பின் பங்கேற்ற முதல் போட்டியில் அக்சர் படேல் டில்லி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். இது குறித்து அவர் கூறியது:

கொரோனா காரணமாக 20 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தேன். முதல் போட்டியில் பங்கேற்கும் முன் சிறிது பதட்டம் இருந்தது. ஆனால் என்மீது நான் கொண்ட நம்பிக்கையை விட, மற்ற அனைவரும் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். இதனால் கொரோனா குறித்து அதிகம் யோசிக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் செயல்பட்டது போல சிறப்பாக செயல்பட திட்டமிட்டேன்.

சூப்பர் ஓவரின் போது யார் பந்து வீசுவது என பல்வேறு விவாதங்கள் எழுந்தன. வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முதலில் நினைத்தோம். ஆனால் சென்னை ஆடுகளத்தை பார்த்த போது சுழலுக்கு சாதகமாக இருப்பது நன்றாகத் தெரிந்தது. இதனால் சுழற்பந்து வீச்சாளர் பந்து வீசினால் நன்றாக இருக்கும் நினைத்தேன்.

உடனடியாக கேப்டன் ரிஷாப்பிடம் சென்று,’ நான் பந்து வீசவா’ என கேட்டேன். அவர் பயிற்சியாளர் பாண்டிங்கிடம் ஆலோசித்தார். கடைசி நிமிடம் சூப்பர் ஓவரை நான் வீசுவது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!