இந்தியா

சுல்தான்பூர் மாவட்ட பெயர் குஷ் பவன்பூர்: உத்தர பிரதேச மாநில அரசு முடிவு

59views

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்தது முதலாக, மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அலகாபாத் நகரின் பெயர் பிரயாக்ராஜ் எனவும் ஃபைசாபாத் மாவட்டத்திற்கு அயோத்யா எனவும் பெயர் சூட்டப்பட்டது. உ.பி.யில் முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது பல மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாகவும், தற்போது அப்பகுதிகளுக்கு அவற்றின் பழைய பெயர்கள் சூட்டப்படுவதாகவும் அரசு தெரிவித்தது.

இந்த வரிசையில் தற்போது சுல்தான்பூர் மாவட்டத்தின் பெயர் விரைவில் குஷ் பவன்பூர் என மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சுல்தான்பூர் மாவட்ட ஆட்சியர் ரவீஷ் குப்தா கூறுகையில், ‘1300-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியின் பெயர் குஷ் பவன்பூர் என்றே இருந்திருக்கிறது. ராமரின் மகனான குஷாவின் பெயர் இந்த மாவட்டத்துக்கு சூட்டப்பட்டிருக்கிறது. பழைய ஆவணங்களில் இருந்து இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக்காலத்தின் போதே இப்பகுதியின் பெயர் சுல்தான்பூர் என மாற்றப்பட்டது. இதுதொடர்பான ஆதாரங்கள் அரசிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெயர் மாற்றத்திற்கு அனுமதியளிக்கப்படும்” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!