இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 02

97views
பெரும்பான்மையான வீட்டில் “எல்லாவற்றையும் அனுசரித்துப் போகவேண்டும்” என்பது பெண்களுக்கு மட்டுமேயான வலியுறுத்தல்தான்..
மானத்தைவிட எடுத்துக்காட்டுடன் விளக்கப்படும் அவமானங்களால் அச்சமுறும் தன்மை அவளுள் புகுத்தப்பட்டு எச்சரிக்கப்பட தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளித் தெரியாமல் மறைக்கவேத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறது சில பெண்ணினம்,அதில் முதன்மையென்றறியப்படுவது பாலியல் துன்புறுத்தல்.
வெறும் ஐம்பது நூறு வீடுகள் கொண்ட கிராமமாக இருந்தாலுங்கூட,
 சிறு வயது குழந்தைகளை மடிக்கு இழுத்தணைத்துக் கொஞ்சி இச்சை தீர்த்துக் கொள்ளத் துடித்த  சித்தப்பன் மார்களையும் ,மாமங்காரர்களையும்,அடுத்த வீட்டுக்காரனையும் அம்மாவுக்கோ? அப்பாவுக்கோ சந்தேகமாக பார்க்கத் தெரிந்திருக்கவில்லை.
 ஏன்? என்று அப்போது கேட்டும் விழிப்புணர்வற்ற காலத்தைக் கடந்து வந்தவர்களின், இன்றைய சுதாரிப்பு இனி வரும் தலைமுறையினருக்கு நிச்சயம் பாதுகாப்புத் தன்மையை ஏற்படுத்தித் தரச் செய்யும்தான்..
உறவுகள் என்ற போர்வையால் இழுத்திப் போர்த்திக் குடும்பத்தை பேணிக்காப்பதை வரலாறாக்கப் பாடுபட்டவர்களாக மட்டும்தான் இருந்திருக்கிறார்கள் அன்றைய பெற்றோர்கள் இல்லையா..?
ஆள் இல்லாத நேரத்தில்தான் அதிகமாகிறது அட்டுழியமென பயந்து, பயந்து அவளின் ஒண்டிக்கொள்ளும் செய்கைகளைக்கூட நொச்சலென்று விரட்டிவிட
மெல்லவும், விழுங்கவும் முடியாமல் தனக்குள்ளே எரித்தாலும் ,சாம்பலகாத அதன் துண்டங்களை காலத்துக்கும் தூக்கிச் சுமந்து தவித்துப் போனவர்கள் எண்ணிக்கையில் அநேகம் இருக்கலாம்…
தீதும் நன்றும் சேர்ந்ததுதான் முழுமையென்றானபின் உறவில் மட்டும் அது “அற்றுப் போகக் கடவது”என்று சாபமிட எங்கெனத் டுவது கடவுளை..அதனால்தான் களமிறங்கிக் கண்காணிக்கும் தன்மையை ஒவ்வொருத்தருமே பங்கிட்டுக் கொள்கிறோம் இப்போது.
 ஆணையோ அல்லது பெண்ணையோ பாலியல் தொல்லைக்கு அகப்படாது காத்தல் கடமையென்றானபின்
“தவறு செய்தலைத்  தவறென்று புரியவைத்தலேச் சரியாகும் “என்ற வழியில் குழந்தை வளர்ப்பு அமைந்துவிடுமாயின்
ஆணென்ன? பெண்ணென்ன?
ஒருவருக்கொருவர்  தோழமைதான் இல்லையா..?
  • கனகா பாலன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!