சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 1.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் வடக்கு மாகாணமான ஷாங்க்சியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 1.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
17,000 வீடுகள் சேதமடைந்ததோடு 189,973 ஹெக்டேர் பயிர்களும் முற்றிலும் நாசமாயின. மேலும் 1,20,100 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளும் பலியாகினர். ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக சராசரியாக 185.6 மிமீ அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.