உலகம்

சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு: 1 கோடியே 30 லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்

72views

மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், அதுவரை மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சீன அரசு உத்தரவு பிறப்பித்துளளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சீனாவில் உள்ள சியான் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. அப்போது, கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்சி மாகாணத்தின் தலைநகரான சியானில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தொற்று பரவலை தடுக்க சியான் நகரில் புதன்கிழமை இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், அதுவரை மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீட்டில் ஒருவர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. மேலும், கொரோனா பரவலை தடுக்க பரிசோதனைகளை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரைக்கு, அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 90 சதவிகிதம் தடுக்கப்படும் என உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியுள்ளது.

அமெரிக்காவில் புதன்கிழமை ஒரே நாளில் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2 ஆயிரத்து 55 பேர் உயிரிழந்தனர். தற்போது வரை 62 சதவிகிதம் மக்களுக்கு இரு தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டுக்கடங்காமல் தொற்று பரவி வருவதால் அமெரிக்க சுகாதாரத் துறை செய்வதறியாது திணறி வருகிறது. இந்நிலையில் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள பாக்ஸ்லோவிட் (Paxlovid) என்ற கொரோனா மாத்திரைக்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!