செய்திகள்தமிழகம்

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிப்பு

56views

சிபிஎஸ்இ +2 மதிப்பெண்கள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தேர்வு நடைபெறாமல் இருந்தது. உச்சநீதிமன்றம் இதற்காக சிபிஎஸ்இ நிர்வாகம் மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு சில உத்தரவுகளை பிறப்பித்து இருந்தனர். மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிப்பது தொடர்பாக முடிவினை எடுக்க அறிவுறுத்தி இருந்தனர். கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், இடைநிலை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அதன் அடைப்படையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கான +2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பிராமண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர். ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற உறுதிப்பாட்டையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவுகளில் விருப்பமில்லை என்றால் பிறகு கொரோனா தொற்று பரவல் சரியான பிறகு தேர்வுகள் நடத்தப்படும், அப்போது மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்து. www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10, 11ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வில் 40% கொண்டு மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!