சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் காங்., கட்சியில் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங், சித்து இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டிகரில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர்பங்கேற்றனர். முதல்வர் மாற்றப்பட்ட போதிலும் அமிரீந்தர்சிங், சித்து இடையே மோதல் தொடர்கதையாகி வருகிறது.
அமரீந்தர்சிங் இன்று (செப்.22) அளித்த பேட்டியில், பஞ்சாப்பிற்கு மிகவும் ஆபத்தானவர், சித்து, வரப்போகும் சட்டசபை தேர்தலில் சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் நான் செய்வேன். சித்துவுக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.