உலகம்

சிட்னியில் தொடர் மழை; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

114views

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பெய்து வரும் தொடர் மழை கார­ண­மாக, சிட்­னி­யில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் தங்­கள் இருப்­பி­டங்­க­ளை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர்.

அத்­து­டன் சிட்னி மக்­கள் அனை­வ­ரும் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பய­ணத்­தைத் தவிர்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

சிட்­னி­யில் ஒரு மாதத்­தில் பெய்ய வேண்­டிய மழை, ஒரே இர­வில் கொட்­டித் தீர்த்­த­தால், சாலை­கள் வெள்­ளத்­தில் மூழ்­கின. பல இடங்­களில் மரங்­கள் வேரோடு சாய்ந்து கிடந்­தன. ஆறு­கள் குப்­பை­க­ளால் நிரம்­பின.

சிட்­னி­யில் இவ்­வாண்­டில் இது­வரை 1,226.8 மில்­லி­மீட்­டர் மழை பெய்­துள்­ளது. இது ஆண்டு சரா­ச­ரி­யான 1,213 மில்­லி­மீட்­ட­ரை­விட அதி­கம்.

வட­மேற்கு பகு­தி­யில் வெள்­ளத்­தில் அடித்­துச் செல்­லப்­பட்ட ஒரு­வரை மீட்­புக் குழு­வி­னர் மீட்­ட­னர்.

பெட்­ரோல் நிலை­யம் ஒன்று வெள்­ளத்­தில் மூழ்­கி­ய­தால், வெள்ள நீரில் எண்­ணெய்க் கசிவு ஏற்­பட்­டது. ஆனால், சில மணி நேரங்­களில் எண்­ணெய்க் கசிவு கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­க­வும் ஆபத்து எது­வும் இல்லை என்­றும் அவ­சர உதவி குழு­வி­னர் கூறி­னர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!