ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ எடுத்துள்ள தடாலடி முடிவால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 2 மில்லியனுக்கும் அதிகமான Binomists மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுங்கள்* நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. 10 அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு உள்ளது.
அதன்படி இந்த முறை ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தேதிகள் என்ன ஒவ்வொரு அணிக்கும் தலா 14 லீக் போட்டிகள் என மொத்தமாக 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணைகள், மைதான திட்டங்கள், ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவதா? ஆகியவை குறித்து பிசிசிஐ அதிகாரிகள் நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். தற்போது அது இறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் விவரங்கள் அதன்படி போட்டிக்கான அட்டவணை அடுத்த வாரத்தில் வெளியாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகள் நடைபெறுவது மும்பை, புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் மட்டும் தான். 55 போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, ப்ராபேர்ன் ஸ்டேடியம், DY பாட்டில் ஸ்டேடியம் ஆகியவற்றில் நடைபெறும்.
மீதமுள்ள 15 போட்டிகள் புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெறும். ப்ளே ஆஃப் சுற்றுகள் அகமதாபாத் மோதிரா மைதானத்தில் நடைபெறவுள்ளது. தோனி அப்செட் ஆனால் பிசிசிஐ-ன் இந்த முடிவில் சிஎஸ்கேவுக்கு சம்மதம் இல்லை எனத்தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடந்தாண்டே ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் தான் தனது கடைசிப்போட்டி இருக்கும் என ஆசைப்பட்டார். அந்த ஆசைக்கு தான் இந்தாண்டும் தடையாக வந்துள்ளது,
பிசிசிஐ-ன் முடிவு. பிசிசிஐ தடாலடி இதனை எதிர்த்து சிஎஸ்கே அணித்தரப்பில் நீண்ட நாட்களாக பிசிசிஐ-க்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு பிசிசிஐ கொஞ்சம் கூட ஒத்துவரவில்லை எனவும் தெரிகிறது. கடந்தாண்டே கொரோனா பரவல் அதிகம் ஏற்பட்டதால், இந்தாண்டும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது. இதனால் தோனி அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.