விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

192views

ஸ்விட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி. சிந்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்விஸ் ஓபன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். ஸ்விஸ் ஓபன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி .சிந்து,  தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான்  இருவரும் பலப்பரீட்சை நடத்தினர்.  இதில் துவக்கத்தில் சிந்து 3 -0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார் . இதையடுத்து அதிரடியாக ஆடிய புசானன் ஓங்பாம்ருங்பானை அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் 7-7 என முன்னிலை பெற்றார்.

இருப்பினும் சிந்து தனது அசாத்திய ஆட்டத்தினால் முதல் சுற்றில் 21-16 என்ற புள்ளிகளுடன் சுற்றை தன் வசம் ஆக்கினார்.  2-வது சுற்றில் 21-8 என்ற செட்டையும் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் 2019 இல் முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இவர் தற்போது இரண்டாவது சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது . ஸ்விஸ் ஓபன் தொடரில்  சாம்பியன் பட்டத்தை வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மீண்டும், எங்கள் ஏஸ் ஷட்லர் பி.வி.சிந்து   #SwissOpen Super 300 பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று, தனது திறமையின் ஆதிக்க திறமையின்  மூலம் சீசனின் இரண்டாவது ஒற்றையர் பட்டத்தை வென்று  நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளார். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, நம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!