சினிமா

சாக்ஷி- சினேகன் இணைந்து நடிக்கும் காதல் படம்.! படத்திற்கு இப்படி ஒரு பெயரா.?!

58views

கோலிவுட் சின்னத்திரையில் அதிக டிஆர்பியை கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ் தான். இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியாளரும் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று மிகப்பெரிய இடத்திற்கு செல்கிறார் கள்.

எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஆனால், பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்புகளை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு காரணம், அங்கே சென்றால் தங்களது மரியாதையை இழந்து விடுவோம் என்பதுதான்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் முக்கியமான ஒருவர் தான் சினேகன். மற்றும் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் நடிகை சாக்‌ஷி அகர்வால். தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இதில் மற்றுமொரு இளம்ஜோடியும் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் பெயர் குறுக்குவழி என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் நந்தா இயக்குகிறார். காதலை மையமாக கொண்டு எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!