இந்தியா

சபரிமலை பக்தர்கள் பம்பையில் நீராட தடை

99views

‘மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பம்பை நதியில் நீராட அனுமதி இல்லை’ என, தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் துவங்கவுள்ளது.

இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதற்கு தலைமை வகித்த தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மண்டல, மகர விளக்கு பூஜைகளின்போது தினந்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதற்கான ‘ஆன்லைன்’ முன்பதிவு நடக்கிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த ஆண்டும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் குளிக்கவோ, கோவில் சன்னிதானத்தில் தங்கவோ அனுமதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!