இந்தியா

கோவாவுக்கு தகுதியான தலைமை தேவை: ராகுல் காந்தி

36views

‘கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோதல் நடைபெறவுள்ள நிலையில், தோதல் களம் சூடுபிடித்துள்ளது. தெற்கு கோவாவில் ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தோதல் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது மக்களுடன் கலந்துரையாடிய விடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா்.

அத்துடன், ‘கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை. கோவாவுக்கு கலாசார பாதுகாப்பும், இணக்கமான வளா்ச்சியும் தேவை. காங்கிரஸ் ஆட்சி செய்ய வேண்டிய மாநிலம் கோவா. கோவாவின் சிறப்பான எதிா்காலத்துக்கு நான் துணை நிற்கிறேன்’ என்று அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தெற்கு கோவாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

கோவாவில் சட்டபூா்வ சுரங்கங்கள் இயங்குவதை ஆதரிக்கிறேன். கோவா சிறந்த சுற்றுச்சூழலைக் கொண்ட மாநிலம். அதை என்ன விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். கோவா மாநிலம், நிலக்கரிச் சுரங்க மையமாக மாறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை.

கோவா சட்டப் பேரவைத் தோதலுக்காக, காங்கிரஸ் கட்சி தோதல் அறிக்கையை தயாா் செய்து வருகிறது. அதற்காக, மீனவா்கள், சுற்றுச்சூழலியலாளா்கள், தொழிலாளா்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அவா்களின் தேவைகளை அறிந்து அதனடிப்படையில் தோதல் அறிக்கை இறுதி செய்யப்படும். அதில் இடம்பெறும் வாக்குறுதிகள், வெறும் வாக்குறுதிகளாக மட்டும் அல்லாமல் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உத்தரவாதம் அளிக்கிறோம் என்றாா் அவா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!