தமிழகம்

கோவளம் – நீலாங்கரை இடையே கடலில் நீந்தி 8 வயது சிறுமி சாதனை

193views

கோவளம் முதல் நீலாங்கரை வரை, கடலில் 6 மணி 14 நிமிடத்தில், 19 கி.மீ., கடல் துாரம் நீச்சல் அடித்து 8 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.சென்னை, நீலாங்கரையை சேர்ந்தவர் ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், 40. இவர், கடல் வளம் பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என, கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திஉள்ளார்.

கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா, 8. இவர், பிறந்த ஒன்பது மாதத்திலே, கடலில் மிதக்கும் அளவுக்கு, தந்தை அரவிந்த் பயிற்சி அளித்தார். தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்ற தாரகை ஆராதனா, நேற்று, கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை, 19 கி.மீ., துாரத்தை, 6 மணி நேரம், 14 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்தார். கடலோர பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று, இந்நிகழ்ச்சி நடந்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!