178
பெருகி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தன்னார்வ அமைப்புகளும் இதில் ஈடுபட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் சேரை இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில், “கொரோனாவை வெல்வோம்;மனித உயிர் காப்போம்” என்ற தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
சேரை ஒன்றிய ஜெ.ஆர்.சி.ஒருங்கிணைப்பாளரும் திலகர் பள்ளி தலைமையாசிரியருமான முனைவர் எஸ்.பண்டாரசிவன் வரவேற்றார்.
தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனரும் துபாய் சமூக ஆர்வலருமான முனைவர் முகமது முகைதீன் நோக்கவுரையாற்றினார். சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலர் திரு சுடலை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாக சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முனைவர் திருமதி சிவசக்தி ராஜம்மாள் துவக்கவுரை ஆற்றினார், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு சிவக்குமார் தலைமையுரை ஆற்றினார், துபாய் மருத்துவர் திருமதி கதீஜா மஹ்மூத் சிறப்புரை வழங்கினார், நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி சிவ.சத்தியவள்ளி வாழ்த்துரை வழங்கினார், புதுச்சேரி முனைவர் கவிதா செந்தில், பிரான்ஸ் பாவலர் பத்ரிசியா பாப்பு, கர்நாடகா கவிஞர் தேன்மொழி, அபுதாபி கவிஞர் கீதாஸ்ரீராம் ஆகியோர் கருத்துரையாளர்களாக கலந்து கொண்டனர், இணையத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த சிறப்பு பன்னாட்டு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழிப்புணர்வுக்காக உரையாற்றிய அனைவருக்கும் அதிராம்பட்டினம் ஆசிரியர், கல்லிடை கவிஞர் உமர்பாரூக் நன்றி தெரிவித்தார்.