129
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு…
- இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் பிற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
- அவசர மருத்துவ தேவைகள், பால், மருந்து விநியோகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- விமான நிலையம், ரயில் நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.
- தமிழகத்தில் இன்று முதல் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- கடற்கரை பகுதிகள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்லவும் அனுமதியில்லை.
- பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- இரவு நேர ஊரடங்கின் போது சென்னையில் 200 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொள்வார்கள்.