இந்தியா

கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றது…! அவசரமாக தரையிறக்கப்பட்டது…!

65views

நாக்பூரிலிருந்து கொரோனா நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தின் சக்கரம் கழன்றதால் வியாழக்கிழமையன்று மும்பை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.குழுவினரும் நோயாளியும் பாதிப்பில்லாமல் தப்பினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா நோயாளிகளை உடனடியாக பிற மாநிலங்களுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,சி -90 விடி-ஜில் என்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நாக்பூரில் இருந்து கொரோனா நோயாளியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றிக் கொண்டு ஹைதராபாத்துக்கு புறப்பட்டது.

இதனையடுத்து விமானம் பறக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் விமானத்தின் சக்கரங்கள் கழன்று விழுந்தது.இதனைத்தொடர்ந்து,மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த கொரோனா நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமானத்தின் சக்கரங்கள் கழன்று விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!