115
தேசிய கல்வி அறக்கட்டளை-கல்லிடைக்குறிச்சி மற்றும் பொதிகை தமிழ் அறக்கட்டளை- நெல்லை இணைந்து வழங்கிய “கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு” ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பாளையங்கோட்ட்டையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் திருமதி.சிவ சத்தியவள்ளி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி அமைப்பாளர்களாக தேசியக்கல்வி அறக்கட்டளை நிறுவனர். முனைவர் ஆ.முகமது முகைதீன் அவர்களும், பொதிகை தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பேரா அவர்களும் நிகழ்வை முன்னெடுத்தனர்.