இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று (மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசிஎன தெரிகிறது.
ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
173views
You Might Also Like
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும்...
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்',...
சோனி லிவ்-வில் (Sony LIV) ஹாலிவுட் திரைப்படங்கள்!
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில்...
ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்” – ஹபீபி நாயகன் ஈசா
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என...
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...




