இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதைத் தொடர்ந்து பலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளதாக அவரின் மகள் சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில்அண்ணாத்த படத்தில்நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று (மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசிஎன தெரிகிறது.
ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
92views
You Might Also Like
ஆற்காட்டில் சுயஉதவிக்குழுக்களின் பொருட்களை பார்வையிட்ட ஆட்சியர்
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருளை ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார். பின்வாங்குவோர் மற்றும் விற்பனையாளர்...
காட்பாடி அடுத்த சேவூர்சத்தியபுரத்தில் இந்து முன்னணி கிளை துவக்கம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர்சத்தியபுரம் பைரா இந்து முன்னணிகிளை கமிட்டி துவக்கவிழா நடந்தது. மாவட்ட செயலாளர் சேவூர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வேலூர் கோட்ட தலைவர்...
ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் ‘ஃபயர்’
ரசிகர்கள் பேராதரவோடு 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்' தமிழ் தயாரிப்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநராக முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை...
ஆற்காடு அருகே இரும்பு கடையில் தீவிபத்து
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்தமேல்விஷாரம் கல்லூரி எதிரில் உள்ள இரும்பு கடையில் பெரும் தீ விபத்து நேற்று மாலை ஏற்பட்டது. லட்சகணக்கில் பொருள்கள் எரிந்து சேதம், விரைந்து...
வேலூருக்கு போதை பொருள் தடுப்பு நாய் ருத்ராவுக்கு பயிற்சி
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க சேர்ந்துள்ள புதிய மோப்பநாய்க்கு ருத்ரா என்ற பெயரை சூட்டிய எஸ்.பி. மதிவாணன், 9 மாத சிறப்பு...