தமிழகம்

கைரேகை பதிவை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை!

99views

கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் எங்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் ஸ்மார்ட் கார்ட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு குடும்ப நபர்களின் கைரேகை வைக்கப்பட்டால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வரிசையாக மக்கள் கைரேகை வைக்கும் போது அதன் மூலமாக கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புண்டு என்பதால் தற்காலிகமாக அதை நிறுத்தி வைக்க வேண்டும் என நியாயவிலைக் கடை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை 2000 ரூபாய் மே 15 ஆம் தேதி முதல் கொடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!