கேரளாவில் கொரோனா காரணமாக பிரசித்திபெற்ற பூரம் திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க இந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திரிச்சூரில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரியமிக்க பண்டிகைகளில் ஒன்று பூரம் திருவிழா. இந்த ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பங்கேற்பின்றி சடங்குகள் மட்டும் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருவம்பாடி மற்றும் பரேமேக்காவு திருக்கோயில்களைச் சார்ந்தவர்களுடன் பூரம் பண்டிகையில் தலைமை செயல் அதிகாரி வி.பி. ஜாய் ஆலோசனை நடத்தியபின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன்பு அனைத்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பொதுமக்கள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் திருச்சூர் மாவட்டத்தில்தான் மொத்த பாதிப்பில் 21% இருப்பதாக சுகாதாரத்துறை அறிவுறுத்தியதன்பேரில் தற்போது இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது.
மேலும், கேரளாவில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. எனினும், பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் அனைத்தும் இரவு 7.30 மணிக்குள் மூடப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.