இந்தியா

கூட்டுறவு சங்கங்கள் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக்கூடாது: ரிசா்வ் வங்கி

68views

கூட்டுறவு சங்கங்கள் தங்களது பெயரில் ‘வங்கி’ என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் 29-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதை தவிர, ஏனைய கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் ‘பேங்க்’, ‘பேங்கா்’, ‘பேங்கிங்’ என்ற வாா்த்தைகளை தங்களது பெயரில் ஒரு பகுதியாக பயன்படுத்தக்கூடாது.

சில கூட்டுறவு சங்கங்கள் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தை மீறி வங்கி என்ற சொல்லை தங்களது பெயரில் பயன்படுத்தி வருவது ரிசா்வ் வங்கியின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதுதவிர, சில கூட்டுறவு சங்கங்கள் விதிகளுக்கு புறம்பாக உறுப்பினா்களிடமிருந்து டெபாசிட் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும் ரிசா்வ் வங்கிக்கு புகாா் வந்துள்ளது. அதுபோன்ற வங்கி சாா்ந்த வா்த்தகத்தில் ஈடுபட அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு ரிசா்வ் வங்கி எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. எனவே, அந்த டெபாசிட்டுகளுக்கு சட்ட ரீதியில் எந்தவித பாதுகாப்பும் கிடையாது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!