சினிமா

குஷ்பூ, மைக் மோகன் இணையும் ஹரா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

118views

80-களின் காலகட்டத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் மோகன். இவர் கடந்த 2008ஆம் ஆண்டில் சுட்டபழம் படத்தில் கடைசியாக நடித்தார்.

அந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் மோகன் ஹரார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

விஜயஸ்ரீ இயக்கும் இந்தப் படம் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தில் மோகனுக்கு ஹீரோயினாக நடிகை குஷ்பு நடிக்க உள்ளார். இதுவரை மோகனுடன் நடிகை குஷ்பு எந்த படத்திலும் நடித்ததில்லை.

முதல்முறையாக இவர்களது கூட்டணி நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தற்போது உடல் எடையை‌ குறைத்த நடிகை குஷ்பு சமீபத்திய நடிகைகளை வியக்கும் அளவிற்கு தனது தோற்றத்தை கவர்ச்சிகரமாக மாற்றி உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!