865views
சிவகங்கை வரலாற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குயிலி எனும் பாத்திரமும் சம்பவங்களும் முழுக்க முழுக்கக் கற்பனையானது என ஆவண ஆதாரங்களுடன் மறுத்துரைக்கின்ற குருசாமி மயில்வாகனன் எழுதிய, “குயிலி:உண்மையாக்கப்படுகின்ற பொய்” எனும் நூலை தமிழகத்தின் மிகமுக்கியமான வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கே. ராஜய்யன் வெளியிட்டார்.
நூலை வெளியிட்டுப்பேசிய, ராஜய்யன், “வீரமிக்க சிவகங்கையின் வரலாற்றில் மிகப்பெரும் தியாகங்களைச் செய்த மருதுபாண்டியர்களுக்குச் சிலை வைக்கப்படாத சிவகங்கையில் எந்த ஆதாரமுமில்லாத கற்பனைப்பாத்திரத்தைக் கொண்டாடுவது தவறானது” எனக் குறிப்பிட்டார். நூலை மக்கள் வாசிப்பு இயக்கத்தின் தலைவர் வீரபாலன் மற்றும் யெல்லோ லோட்டஸ் டிவி நிறுவனர் தினகரன் ஜெய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நன்றி