கட்டுரை

குன்னிமுத்து-குன்றி மணி.

1.79Kviews

குன்னிமுத்து-குன்றி மணி

 

என் பால்ய வயதில் விளையாட்டு இதை வைத்து தான்….
இதன் பரிச்சியமில்லாத பிள்ளைகள் அப்போது கிராமப்புறங்களில் வளர்ந்திருக்க முடியாது…
தோட்டங்களில் கொடியாக ஏதாவது மரத்தை பற்றிக்கொண்டு வளர்ந்து நிற்கும் புளிய மரத்தின் இலை போன்ற இலைகள் இதற்க்கும் இலைகள் இருப்பதால் அந்த மரத்தை பற்றி இருந்தால் எளிதாக கண்களில் தென்படுவதில்லை….
அதன் காயினை முதிரும் முன் உடைத்து பார்த்தால் இளம்சிவப்பு வண்ணத்தில் அழகாய் தெரியும் முதிர்த்து வெடித்தபின் சிகப்பு -கருப்பு நிறத்தில் இருக்கும்….
இந்த குன்னிமுத்து விதையின் பாலிஷ் செய்யப்பட்டது போன்ற வழுவழுப்பான தன்மை .ஆச்சர்யம் மிகுந்த அழகு ..
இதை வைத்து சிறு வயதில் அமர்ந்து பாடல் பாடி விளையாடிய அனுபவம் நிறைய உள்ளன…..
சுற்றிஅமர்ந்து கொண்டு
சாட்… பூட்… த்ரீ…. சொல்லி இறுதியில் யார் கடைசியில் வருகிறார்களோ….. அவர்கள்தான் யார் கையில் குன்னி முத்து இருக்கு என்பதை கண்டுபிடிக்க வேண்டும்… முத்தை யாராவது ஒருவர் கையில் வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் கைகளை நீட்டச் செய்து ஒவ்வொரு கையிலும் காட்டுவோம்….
அப்போது பாடல்….
குன்னிமுத்து….. குழலி முத்து…. கோட்டியப்பன்….. தங்கச்சி முத்து…. யாரடிச்சா…. யவரடிச்சா…. உருண்டே…. உருண்டே…. உருண்டே….
என்று சொல்லி முடித்து விட்டு யார் கையிலாவது வைத்து பின்….
அனைவரும் கைகளை உருட்ட கடைசியாக வந்தவர் யார் கையில் முத்து இருக்கின்றது…. என்பதை கண்டுபிடிக்க வேண்டும்….
அப்ப எல்லாம் பென்சில் பாக்சில் இருக்கும் ஒரு விளையாட்டு பொருட்களில் இதுவும் ஒன்று….மலரும் நினைவுகளை சுமந்த மனது..
பலதை மறந்தாலும் இந்த பாடல் கூட இன்னும் என் மனதில் அழியா நினைவுகளாய்……

Right Click & View Source is disabled.

error: Content is protected !!