தமிழகம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி புறக்கணிப்பு ஜன.26-ல் தி.க. ஆர்ப்பாட்டம்

101views

குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து வரும் 26-ம் தேதி அனைத்துக் கட்சி அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜன.26-ம் தேதி புதுடில்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் தமிழகம் கேரளா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடம் அளிக்காமல் புறக்கணித்துள்ள மத்திய அரசின் நிலைப்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு நாள் அணிவகுப்பில் அலங்கார ஊர்தியில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள், எந்த வகையான அம்சங்களும், அடையாளங்களும், தகவல்களும் இடம்பெற வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை பெற்றவையே.

அந்த அடிப்படையில் தமிழகத்துக்கான அலங்கார அணிவகுப்பில், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வ.உ.சி., பாரதியார் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நியமித்த 10 பேர் கொண்ட குழு நிராகரித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலை ஒலிக்கும் வகையில் வரும் 26-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி அலுவலகங்களின் வாயிலிலும், வீடுகளின் முன்பாகவும் கண்டனக் குரலை எழுப்பும் அமைதி ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!