சினிமாவிமர்சனம்

கிரேவ் ஆஃப் தி ஃபயர் ஃபிளைஸ்

190views
1967ஆம் ஆண்டு வெளிவந்த அக்கியுகி நோசாகாவின் (semi autobiographical story) சுயசரிதையான இரண்டாம் உலகப் போரின் இரண்டாம் நாளின் கதையை அடிப்படையாகக் கொண்ட யசுஜிரோ ஓய்ஸ் இயக்கி 1988ஆம் ஆண்டு வெளியான ஜப்பானிய அனிமேஷன் திரைப்படம்.
அனிமேஷன் திரைப்படம் என்றாலே குழந்தைகளுக்கான பாண்டஸியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காலகட்டத்தில் போரின் எதார்த்தத்தையும் எதிர்ப்பையும் மைய கதை கருவாக கொண்டு அனிமேஷனில் தயாரிக்கப்பட்ட மிகச்சிறந்த திரைப்படம் இந்த கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃபிளைஸ் போரின் அருவருப்பான யதார்த்தத்தை இயக்குனர் யசுஜிரோ ஓய்ஸ் அனிமேஷனில் அருமையாக காட்சியமைத்திருகின்றார்.
இரண்டாம் உலகப் போரின்போது துறைமுக நகரமான கோபியிள் நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் வீட்டை இழந்த குழந்தைகளான சீட்டா மற்றும் அவனது சகோதரியான செட்சுகொவும் ஜப்பானில் உயிர் பிழைக்கப்படும் போராட்டங்களை மையமாக வைத்து நகர்கிறது இந்த திரைப்படத்தின் கதை.
முக்கிய கதாபாத்திரமான சீட்டா ஒரு ரயில் நிலையத்தில் உள்ள தூணுக்கு அருகில் அழுக்குப்படிந்த கிழிந்த உடையுடன் உயிரற்ற நிலையில் விழுந்து கிடக்கிறான், “செப்டம்பர் 21, 1945 நான் இறந்த இரவு அது “ என்ற துயரமான மற்றும் சக்திவாய்ந்த ஒரு வசனத்துடன் தொடங்குகிறது இந்த திரைப்படம். முழு கதையும் சீட்டா வின் கண்ணோட்டத்தில் நகர்கிறது.
சீட்டா ஒரு இளம் வாலிபன், அவனுடைய சகோதரி செட்சுகோவுக்கு வயது 5. அவர்களின் தந்தை ஜப்பானிய கடற்படையில் பணியாற்றுகிறார், கோபி நகரத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு மரித்துப்போகிறார் அவர்களின் தாயார்.நகரம் முழுமையாக பாதிக்க பட்டிருக்கிறது சீட்டாவும் சேட்சுகோவும் தங்குவதற்காக ஒரு இடத்தை தேடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள், அவர்களுடைய அத்தை அவர்களைச் சேர்த்து கொள்கிறாள், முதலில் சிறிது காலத்திற்கு எல்லாம் நன்றாக தான் நகர்கிறது.
அவர்களின் அம்மாவின் விலையுயர்ந்த காமினோ ஆடைகளை விற்று அரிசி வாங்குகிறாள் அத்தை அதில் ஒரு சிறிய பங்கை சீட்டா மற்றும் செட்சுகோவிடம் தருகிறாள். நாட்கள் நகர்கின்றன அவர்களின் அத்தை மெல்ல அவளது கொடூரமான முகத்தை காண்பிக்க ஆரம்பிக்கிறாள்.
இறுதியில் சீட்டா வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்கிறான்.அவனிடம் உணவுகள் வாங்கும் அளவிற்கு சிறிது பணம் இருக்கிறது.அவர்கள் வாழக்கூடிய ஒரு மலைக் குகையை கண்டுபிடிக்கிறான் சீட்டா,இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி குகையில் தஞ்சமடைகிறார்கள்.நாட்கள் நகர்கின்றன, பணம் தீர்ந்துவிட, உணவுக்காக சீட்டா திருட ஆரம்பிக்கிறான் , சேட்சுகோ உடல் நலம் குன்றி பலவீனமடைகிறாள்.
இந்தக் கதை ஒரு ‘மெலோ ‘ட்ராமாவை போல சித்தரிக்கப்படவில்லை, நேரடியாக நியோரியலிஸ பாரம்பரியத்தில் உருவாக்கப் பட்டிருக்கிறது மேலும் இதில் பொறுமையான மற்றும் அமைதியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.பொறுமையான காட்சிகள் இந்த திரைப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கதாபாத்திரங்களின் தனிப்பட்ட தருணங்களை உணரவும் சிந்திக்கவும் பார்வையாளர்களுக்கு நேரமளிக்கிறது.
ஜப்பானிய கவிஞர்கள் உபயோகிக்கும் பில்லோ வர்ட்ஸ் முறையைப் போல இயக்குநர் யசுஜிரோ ஓய்ஸ் பிலலொ ஸாட்ஸை இயற்கையை விவரிக்க காட்சிகளை இரண்டாக பிரிக்க உபயோகித்திருக்கின்றார். அதனால் காட்சிகள் கவிதையை போல உருவம் பெறுகின்றன.
பின்னணி காட்சிகள் மற்றும் இடங்கள் 18 ஆம் நூற்றாண்டின் ஜப்பானியகலைஞர் ஹிரோஷிகே மற்றும் அவரது நவீன சிஷ்யர் ஹெர்கே அவர்களின் பாணியில் வரையப்பட்டுள்ளது. கதாபாத்திரங்கள் மிகவும் நவீன ஜப்பானிய அனிமேஷனுக்கு பொதுவானவை, அவற்றின் மகத்தான கண்கள், குழந்தை போன்ற உடல்கள் மற்றும் சிறந்த பிளாஸ்டிசிட்டியின் அம்சங்கள்.
மேலும் சிறந்த அழகிய தனிப்பட்ட தருணங்கள் பல உள்ளன.ஒன்று குழந்தைகள் இரவில் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து தங்கள் குகையை ஒளிரச் செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
மறுநாள் காலையில் சீட்டா ,செட்சுகோ இறந்த பூச்சிகளை கவனமாக புதைப்பதைக் கண்டான்,அவன் அம்மா புதைக்கப்பட்டதை நினைத்து கொண்டு.
மற்றொரு அழகான காட்சி அதில் செட்சுகோ தனது அண்ணனுக்கு கற்பனையான இரவு விருந்து தயார் செய்கிறாள் அதில் களிமண்ணில் செய்யப்பட்ட “அரிசி உருண்டைகள்” மற்றும் பிற கற்பனையான சுவையான உணவுகளும் இடம்பெறுகின்றன.
போரின் உருமாற்றம் அதன் விளைவு சீட்டா மருத்துவரின் உதவியை நாடும் காட்சிகளில் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கின்றார் இயக்குநர் யசுஜிரோ ஓய்ஸ். சீட்டா தீக்காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் தனது அம்மாவின் உடல் அருகில் நின்று கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் உன் தாயை காப்பாற்ற இயலாது எனக் கூறும் காட்சிகள் இயலாமையால் வரும் சோகத்தால் நிறைந்திருக்கிறது.
பிந்தையக் காட்சிகளில் சீட்டா தனது தங்கையை மரணத்திலிருந்து காப்பாற்ற மருத்துவரிடம் உதவி கேட்கும் போது , மருத்துவர் மருந்து தேவையில்லை ஊட்டச்சத்து மிகுந்த உணவு மட்டுமே காப்பாற்ற வழி என்று கூறி , உதவும் நிலையில் இருந்தும் மருத்துவர் உதவ முன்வராமல் வெளியேற சொல்லும்போது சீட்டா ஏமாற்றத்தில் கத்தும் காட்சிகள் போரின் விளைவை கண்முன் நிறுத்துகிறது.
இந்த திரைப்படத்தில் பார்ப்பதற்குக் கடினமான மற்றும் மனதை உலுக்கக் கூடிய காட்சிகள் சேட்சுகோ மார்பிள் கல்லை மிட்டாய் என உறிஞ்சுவதும் மற்றும் மண்ணை கிண்ணத்தில் வைத்து அதை அரிசி என விளையாடுவதும் அதை தொடர்ந்து மற்றொரு மனதைத் தொடும் காட்சி போர் முடிந்து விட்டது சீட்டாவுக்கு ஒரு வழியாக உண்மையான உணவு கிடைத்துவிட்டது , சீட்டா ஒரு தர்பூசணியை சேட்சுகோ ஊட்ட முயல்கிறான் , சேட்சுகோ தங்கத்தால் சோர்வடைந்து தூங்கிவிட்டாள் அவள் .திரும்பவும் எழுந்திரிக்க போவதில்லை என்பது எங்களுக்கு தெரியும் , சேட்சுகோவின் கடைசி வார்த்தைகள் “சீட்டா நன்றி”
  • ஹென்றி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!