334views
இந்திய திரைப்படத் திறனாய்வு சங்கமும், உலக சிலம்பொலி தமிழ்த்தரணி மன்றமும் இணைந்து நடத்திய கவிஞர் மு.வீரமுத்துவின் 52-ஆம் பிறந்த நாள் விழா சென்னையில் செப்டம்பர் 30-ஆம் தேதி ICSA மையத்தில் கோலாகலமாக நடந்தேறியது.
விழாவிற்கு பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் தலைமை வகித்தார். கவிஞர் சிந்தைவாசன், அந்தோணி ராமச்சந்திரன், கவிஞர் ஜலாலுதீன், நந்தவனம் சந்திரசேகரன், கவிஞர் அன்பரசன், தின உரிமை இதழின் ஆசிரியர் கல்பனா, எழுத்தாளர் தன்மையணிப்பு பேச்சாளர், கவிஞர் தமிழியலன், நான் மீடியா நிறுவனர் RJ நாகா போன்றோர் கலந்துகொண்டு கவிஞரை வாழ்த்தி பேசினார்.
கவிஞர் தமிழ்செல்வன் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
விழாவில் பிரமோஸ் ஏவுகணை என்ற கவிதை நூலும் வெளியிடப்பட்டது.
add a comment