தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தனிக்கட்சியாக போட்டியிட்டு படுதோல்வியடைந்து கட்சிகளில் கமலின் மக்கள் நீதி மையமும் ஒன்று அனைத்து இடங்களில் படுதோல்வி…
கமலின் அணுகுமுறைகளில் மாற்றம் இல்லை, மாறுவார் என்று எதிர்பார்க்கவும் முடியாது எனக் கூறி மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர், பொதுச் செயலாளர் என்று முக்கிய தலைவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
அங்கிருக்கும் நமது செய்தியாளர் தெரிவிக்கையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய கமல் கூட வெற்றி பெற முடியாத நிலையில், மொத்த கூடாரமும் காலியாகத் தொடங்கியுள்ளது.
இது குறித்து மகேந்திரன் கூறியதாவது கட்சியின் பெரிய தோல்விக்கு பிறகும், கமல் அணுகுமுறையில் மாற்றம் இல்லை. மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை என்று தெரிவித்து்ளளார்.
இதனைத் தொடர்ந்து இன்னு பல முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கமலின் முகஸ்துதி பாடுபவர்கள் மட்டுமே அவருடன் இருக்கின்றார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய நிர்வாகிகள் விலகல் காரணமாக ம.நீ.மையம் வலுவிழந்து காணப்படுவாக தெரிவிக்கப்படுகின்றது.