587
வ.உ சி இந்த மூன்றெழுத்து மந்திரம் சுதந்திர வேள்வியை வளர்க்கும் யாகத்து நெய்யாக மாறியது.
மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ சிதம்பரம் பிள்ளை தனது சொத்துக்கள் அனைத்தையும் தேசத்திற்கு சுதந்திரம் வாங்கித் தருவதற்காகவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவுவதற்காகவும் முற்றிலுமாக இழந்தார்.
1905இல் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் இவர். 1906இல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக எஸ் எஸ் காலியோ எஸ் எஸ் லாவோ ஆகிய இரண்டு கப்பல்களை விலைக்கு வாங்கினார். 1500 பயணிகளோடு சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு வசதி படைத்ததாகவும் ஆங்கிலேயக் கப்பல் கப்பல்களுக்கு இணையானதாகவும் அது இருந்தது.
ஆங்கிலேயரின் வர்த்தகம் ஆட்டம் காணத் தொடங்கியது. இந்த நிலை நீடிக்க விடக்கூடாது என்பதற்காக தங்களது கப்பலில் பயணிக்கும் பயணிகளுக்காக பல சலுகைகளை அறிவித்தும் கட்டண குறைப்பு செய்தும் சில சந்தர்ப்பங்களில் கட்டணம் ஏதும் இன்றியும் பயணிக்கலாம் என்று ஆசை காட்டியும் மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க நினைத்தனர். ஆனால் தேசியம் பெருகிய அந்த நிலையிலே மக்கள் அனைவரும் சுதேசி கப்பலை ஆதரித்தனர் இந்த காலகட்டத்தில்தான் சுதேசி இயக்கமும் தொடங்கியது .
அன்னிய பொருட்களை புறக்கணித்து இந்திய பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை முன்னிறுத்தியதாக சுதேசி இயக்கம் இருந்தது. ஆங்கிலக் கல்வி கூடங்களில் கல்வி கற்பதை விடுத்து இந்திய கல்வி முறையில் கல்வி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டது.
தன்னுடைய சுதேசி கப்பல் நிறுவனத்தை பற்றி வ உ சி குறிப்பிடுகின்ற பொழுது வியாபார நோக்கத்திற்காக மட்டும் அமைக்கப்பட்டது அல்ல வெள்ளையனை மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற வைப்பதே இதன் நோக்கமாகும் என்றார் ஒரு வழக்கறிஞராகவும் தேச பக்தராகவும் அரசியல் தலைவராகவும் தூத்துக்குடியில் முகிழ்த்த முத்து, பிள்ளை அவர்கள். பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கப்பல் நிறுவனமானது ஆங்கிலேயரின் வியாபார ஆதிக்கத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணியாக அமைந்தது.
பயணிகளுக்கும் வியாபாரத்திற்குமானன நோக்குடன் கூடிய ஆங்கிலேயர்களின் கப்பல் கவிழ்ந்து விடும் நிலையை எட்டியதால் வெள்ளையர்கள் வெலவெலத்துப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.
இந்திய சுதந்திரப் போராட்டமும் சுதேசி பொருட்களையே வாங்க வேண்டும் அந்நிய பொருட்களை அறவே ஒழித்து நம் நாட்டில் தயாரித்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற இயக்கமும் வலுப்பெற்றது நாடெங்கும் தேசியம் கண்ணாக சேவையே நெஞ்சாகவும் கொள்ளும் மனப்பக்குவம் மக்களிடையே வலுப்பெற்றது. இந்த அந்நிய பொருட்களை புறக்கணித்தல் பணியில் முன்னணியில் நின்று பங்கு பணியாற்றியவர்கள் அரவிந்த கோஷ் ,பால கங்காதர திலகர் ,விபின் சந்திர பால் மற்றும் லாலா லஜபதிராய்ஆவர்.
1905இல் ஏற்பட்ட வங்கப்பிரிவினை யானது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஒரு உதாரணமாக அமைய ஆங்கிலேயருக்கு எதிரான இயக்கம் இன்னும் அதிகமாக வலுவடைந்து முடுக்கி விடப்படக் .காரணமாய் அமைந்தது.
சுதேசி கப்பல் போக்குவரத்துக கேந்திரமான தூத்துக்குடி தமிழகத்தின் கடல்வழி நுழைவாயில் என்று அழைக்கப் பட்டதோடு அல்லாமல் முத்து குளிப்பதற்கும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளாகவும்பெயர் பெற்ற இடமாக மாறியது.
தூத்துக்குடியின் வியாபாரிகள் இலங்கையோடு வியாபாரத் தொடர்பில் இருந்தனர் ஆங்கிலேயர்கள் தங்கள் வியாபார கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் ஆன வியாபாரத்தை தங்கள் வசப்படுத்திய தால் அதை தகர்த்து சுதேசி கப்பல் நிறுவனம் செயலாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டார் வ உசி அவர்கள். மன்னார் வளைகுடாவில் தங்கள் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு சுதேசி கப்பலா என பயந்தனர்; கோபமும் கொண்டனர் ஆங்கிலேயர்கள். சுதேசி இயக்கமும் வந்தேமாதரம் என்ற இயக்கமும் பின்னாளில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன்னோடியாக அமைந்தது. பிள்ளையவர்கள் ஆரம்பத்தில் கப்பலை குத்தகைக்கு எடுத்து தான் தன்னுடைய பணியினை தொடங்க வேண்டும் என்று நினைத்து இருந்தார் ஆனால் அப்படி நடைபெறா வண்ணம் ஆங்கிலேயர்கள் இடையூறு செய்தமையால் சொந்தமாகவே கப்பல் வாங்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார் கப்பலோடு வந்தால் வருவேன் இல்லாவிட்டால் கடலிலேயே மூழ்கி மடிவேன் என்று வீரவசனம் பேசி சென்றவர் மிகவும் கஷ்டப்பட்டு கப்பல்களை வாங்கி சொந்தமான கப்பல்களை தூத்துக்குடியில் கொண்டு வந்து நிறுத்திய பொழுது ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கினர்.சுதேசிக் கப்பலின் செயல்பாட்டினை தடுக்கக் கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.
சுதேசிகப்பலுக்கான பயண நேர ஒதுக்கீடு செய்வதில் தாமதப்படுத்தினர் மருத்துவ வசதிகளை தராமல் தவிர்த்தனர் இப்படி பல தொந்தரவுகளை அவர்களுக்கு ஏற்படுத்திசுதேசிக் கப்பல் இன் செயல்பாட்டினை தடுக்கக் கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டனர் இப்படி பல தொந்தரவுகளை அவர்களுக்கு ஏற்படுத்தினர் ஆங்கிலேயர்கள். 1908ல் சுதேசிக் கப்பல் தவிர சுதேசி மக்கள் இயக்கமும் செயல்பட ஆரம்பித்தது.
1883 இல்அற்புதமான நூற்பாலை ஒன்றும் தொடங்கப்பட்டது சுதந்திரப் போராட்ட வீரர் மட்டுமல்ல மிகச் சிறப்பான சிறந்த கவிஞரும் ஆவார் பிள்ளையவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார். சிவஞானபோதத்திற்கும் உரை எழுதியிருக்கிறார். தெளிவுரை எழுதுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல அந்த நூலை முழுமையாக படித்து புரிந்து உள்வாங்கிய பிறகுதான் அதற்கான தெளிவுரையை எழுத இயலும் அப்படி எழுதி தன்னை ஒரு சிறந்த எழுத்தாளராகவும் நிலைநாட்டி க் கொண்டார் வஉசி அவர்கள்.
அவர் தொடங்கிய நூற்பாலைகளில் நூலாராய்ச்சி அவர் எழுத ஆரம்பித்த நூல்களிலும் நூல் ஆராய்ச்சி என்று இரண்டு நிலைகளிலும் தன்னை சிறப்பான ஒரு நிலைக்கு உயர்த்திக் கொண்டார் வ.உ.சி.
பாரதியாரின் எழுச்சி மிக்க பாடல்களும் சுப்பிரமணிய சிவாவின் தேசப்பற்றும் சிதம்பரனார் அவர்களின் தேசப்பற்றும் ஒருங்கிணைந்து வெள்ளையனின் ஆதிக்கத்திற்கு மெல்ல மெல்ல சாவு மணி அடிக்க ஆரம்பித்தது வெள்ளையர்கள் வெளியேறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் ஆனால் அதே நிலையில் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.
சொத்துக்களை இழந்தாலும் சிறையில் வாடினாலும் பல இன்னல்களுக்கு ஆளாகி நோய்வாய்ப்பட்ட போதும் சரியான அளவிற்கு கவனிப்பு இல்லாத போதும் அவருடைய தேசபக்தியை மட்டும் எதுவுமே குறைப்பதற்கு காரணமாக அமையவில்லை.
அளவிடமுடியாத சொத்துக்களுக்கு அதிபதியான வாஉசி இறக்கும் தருவாயில் ஒரு கடனாளியாக இறந்தார்.
ஆனால் இந்திய மக்கள் அவருக்கு நன்றி கடனாளிகளாக இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தியர்களின் எண்ணத்தில் மிகச்சிறந்து ஒரு நிலையை ,சிறந்த ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் வ.உ.சி.
கோவை சிறையில் செக்கிழுத்தார் அவர். செக்கிழுத்த செம்மல் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். தேச விடுதலைக்காக பாடுபட்ட அவர் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இருந்ததால் தேசத் துரோகி என அழைக்கப்பட்டார்.
இன்றைய இளைஞர்கள் நிச்சயமாக வ.வுசி போன்ற தேச பக்தர்களைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் தெரிந்து கொண்டு, எப்பேர்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது நம்முடைய நாடு எப்பேர்ப்பட்ட பாரம்பரியம் மிக்கது நம்முடைய நாடு எப்படிப்பட்ட தேசபக்தர்கள் எல்லாம் வலம் வந்த நாடு நம்முடைய நாடு எப்படி அந்த மக்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்து சொத்துக்களை எல்லாம் நாட்டிற்காக விட்டுக்கொடுத்து தங்களுடைய நிலையை பற்றி எண்ணிப் பாராமல் தேசத்திற்காக மட்டுமே வாழ்ந்தார்கள் என்பதை நமது இளைஞர்கள் நிச்சயமாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்னும் அறிவு, ஆக்க பூர்வமான அறிவு அவர்களுக்கு ஏற்படும்.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்று பாரதி பாடினார்.
அவருடைய எழுச்சிமிக்க பாடல்களாலும் சிதம்பரம் பிள்ளை போன்ற தேசபக்தர்களின் சுயநலமற்ற தியாகத்தாலும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் தான் இந்த சுதந்திரம் அதைப் பேணிக் காக்க வேண்டும் அதற்காக நாம் நம்முடைய கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும் அன்றைக்கு எல்லாத் தலைவர்களும் தங்களுடைய சொத்துக்களை இழந்தனர் நாம் இன்று சொத்துக்களை இழக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தேசத்தையே நம்முடைய சொத்தாக நினைக்கவேண்டும் அன்றைக்கு அவர்கள் எல்லாம் இரத்தம் சிந்தினார்கள் நாம் ரத்தம் சிந்த வேண்டியதில்லை.
தேசத்தை முன்னேற்றுவதற்காக அவரவர் கடமையை ஆற்றுவதற்காக வியர்வை சிந்தினால் போதும் இந்த பாரத தேசம் மிகச் சிறந்ததொரு நாடாக உலக அரங்கில் பவனி வரும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
வாழ்க பாரதம் வாழ்க தேசியக்கொடி வாழ்க சுதந்திரம் வாழ்க சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
-
வே.உலகம்மாள், கோவை.
add a comment