தமிழகம்

கனமழை காரணமாக சென்னை, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

76views

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, விழுப்புரம், ராணிப்பேட்டை, நாமக்கல், வேலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஓரிரு மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவை பிறப்பித்துள்ளன. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!