68
புரோ லீக் ஹாக்கி தொடரில், இந்திய ஆடவர் அணி 5க்கு – 4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் இத்தொடரில், இந்திய அணி ஸ்பெயினை எதிர்கொண்டது.
ஸ்பெயினின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் 1க்கு – 4 என இந்திய அணி பின்தங்கி இருந்தது. கடைசி கால் மணி நேரத்தில் பதிலடி கொடுத்த இந்திய அணி 5க்கு – 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புரோ லீக் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.