தமிழகம்

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

44views

அதி­முக கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­விக்கு ஓ. பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் போட்­டி­யின்றித் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­முக தேர்­தல் ஆணை­யர்­கள் பொன்­னை­யன், பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் ஆகி­யோர் இந்த அறிவிப்பை நேற்று வெளி­யிட்­ட­னர்.

இந்நிலையில், “அதி­மு­க­வில் இனி இரட்­டைத் தலை­மை­தான். சசி­கலா டிடி­வியை கட்­சி­யில் இணைப்­பது குறித்த கேள்­விக்கே இட­மில்லை. அதி­மு­க­வில் நிரந்­தர பொதுச்­செ­ய­லா­ளர் ஜெய­ல­லிதா மட்­டும்தான்,” என முன்­னாள் அமைச்­சர் கடம்­பூர் ராஜு தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, பெரம்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறுகையில், ஜெயல­லிதா நினை­வி­டத்­துக்கு சசி­கலா தொண்­டர் படை­யு­டன் வர­வில்லை; குண்­டர்­கள் படை­யு­டன் வந்­தார்.

தொண்டர்களுக்காக சசி­கலா அறிக்கை விடு­வது கொம்பு சீவி விட்டு, அதற்­காக முத­லைக் கண்­ணீர் வடிப்­பதைப் போன்­ற­தா­கும் என்று ஜெயக்­கு­மார் விமர்­சித்­துள்­ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!